Home  |  News

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

Contact Person அறிவு ராமலிங்கம்
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு உடனடியாக என்ன தேவை என்பதை அறிந்து  இரண்டு மரம் பொடியாக்கும் ( wood chipper Machine)  இயந்திரங்களை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் வழங்கியது. 

கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்பை அறிந்து உடனடியாக அறிக்கை வெளியிட்ட  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.இராசாராம் சீனுவாசன் அவர்கள் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்  சங்கத்தின் செயலாளர் திரு.அறிவு இராமலிங்கம் தலைமையில்    கஜாபுயல் மீட்புக்குழு  அமைத்து  நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தார். அதனையொட்டி கஜா பாதித்த பகுதிகளின் உடனடி தேவைகளை அறிந்து போதிய நிதி திரட்டி இரண்டு மரம் பொடியாக்கும் ( wood chipper Machine)  இயந்திரங்களை மரம் அகற்றவும், வீழ்ந்து கிடக்கும் பயனற்ற மரங்களை பொடியாக்கி இயற்கை உரமாகவும், வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் உதவும் வகையில்  வழங்கியது. 

 

இதை மக்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் திரு. ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதை ஒருங்கிணைத்து சரியான தேவையை அறிந்து உரிய கிராமத்திற்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பை காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயளாளர் திரு.ஆறுபாதி ப கல்யாணம் , தொழிலதிபர் மற்றும் எக்ஸ்னோராவின் தலைவர் திரு.செந்தூர் பாரி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். 

  04 Jan 2019 07:23 PM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)