Home  |  Innovation

குடிநீர் பிரச்னை தீர்க்க மின்சாரம் திரும்ப கிடைக்கும்வரை

குடிநீர் பிரச்னை தீர்க்க மின்சாரம் திரும்ப கிடைக்கும்வரை

கஜா புயல் நிவாரணத்தில் குறிப்பறிந்து செயல்படும் தன்னார்வலர்கள் கவனத்திற்கு ,

மிக அதிக பாதிப்பிற்குள்ளான கடலோர கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்க்க மின்சாரம் திரும்ப கிடைக்கும்வரை அங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள மின் மோட்டாரை நீக்கிவிட்டு அடி பம்புகளை பொருத்துத்திவிட்டால் கையால் பம்பை இயக்கி தண்ணீரை உபயோகத்திற்கு எடுத்துக் கொள்வார்கள்.

நேற்றைய தினம் இரண்டு கிராமங்களுக்கு இரண்டு பம்புகள் மற்றும் 20 அடி பைப்புகளை எங்கள் குழுவினர் அளித்து வந்தனர் இன்று அதனை பொருத்தி தண்ணீர் எடுக்க துவங்கிவிட்டனர். நிலத்தடி நீர் 12 முதல் 20 அடிக்குள் இருப்பதால் எளிதாக குடிநீர் கிடைக்க துவங்கியுள்ளது.

இந்த முயற்சியை மேற்கொண்டு ஒவ்வொரு கிராமங்களுக்கும் அமைத்துக் கொடுத்தால் தண்ணீர் பிரச்னை பெருமளவில் தீரும்.

அரசும் இதனை முன்னெடுக்கலாம் ஏனெனில் மின்சாரம் அனைத்து பகுதியிலும் கிடைக்க இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதே நிலவரம்.

படத்தில் நாகை மாவட்டம் B.R. புரம் கிராமத்தில் இன்றைய தினம் பொருத்தப்பட்ட அடி பம்பின் வாயிலாக குடிநீர் பெரும் காட்சியை காணலாம்

இதற்கான மொத்த செலவு ரூபாய் மூன்றாயிரத்து ஐநூறு மட்டுமே Rs.3,500

இது தொடர்பான எனது முந்தைய பதிவு

https://www.facebook.com/100000649661664/posts/2212742595424041/

  24 Nov 2018 02:46 PM
 More like this
தென்னை மரக்கன்றுகளை ரூபாய் 20-30 க்கு தரத் தயாராகும் சோலைவனம்
அவசர குடிசை வீடுகள் 120 அடியில் Rs.6000 செலவில்
மெழுகுவர்த்தி :பெண்களுக்காக குறள் எழுப்பிய பாரதியின் பிறந்தநாளன்று பெண்களுக்கு முன்னேற்றத்தை தரும் இந்த தொழிலை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி...
Man develops machine which produces 3500 watts electricity
சோலார் தெருவிளக்கு Rs.9500/-(NOT Rs.21000)
Coconut Bulk purchase options from affected areas
மாணவர்கள் களமிறங்கினால் வாழையை காப்பாற்றலாம்: வேளாண் விஞ்ஞானி பரசுராமன் யோசனை
விழுந்த தென்னைமரங்களை மீண்டும் நடமுடியும்
குடிநீர் பிரச்னை தீர்க்க மின்சாரம் திரும்ப கிடைக்கும்வரை
கஜா புயல் மீட்புபணி - தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை பயன்படுத்தி மின்சாரம்..