Home  |  News

டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)

Contact Person Press-release-about-gaja
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)

 

கஜா புயல் கடந்த மாதம் 15ம் தேதி இரவு துவங்கி 16 காலை வேதாரணியத்தில் கரையை கடந்தது. கஜாவின் கோரத்தாண்டவம் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதுதவிர திண்டுக்கல் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கஜாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகவும் தற்கொலை செய்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆகவும் இருக்கிறது.
புயல் பாதித்த மறு கணத்தில் இருந்து தன்னார்வலர்கள், அமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்கி சென்னை வெள்ளத்தில் எப்படி பணி செய்தோமோ அது போன்ற பணியை மேற்கொண்டோம். புயல் அடித்துக் கொண்டிருந்த அந்த இரவே ஒரு குழுவினர் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனமும் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து மற்ற உபகரணங்களும் எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் மக்களின் உயிர்களை காப்பாற்ற நாகை விரைந்தனர். அப்படி இருந்தும் சுமார் ஆறு உயிர்கள் அவர்களின் ஆம்புலன்ஸிலேயே பிரிந்தது. அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தையும் பிறந்தது.
இதனை தொடர்ந்து மக்களுக்கு உடனடி தேவையாக பிரதான சாலைகளில் இருக்கும் மரங்களை அகற்றுவது முக்கிய பணியாக இருந்தது. அந்த மரங்களை அகற்றினால்தான் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு நிவாரண உதவிகள் கூட சென்றடையும் என்ற சூழ்நிலை உருவானது.
களத்தில் இறங்கிய மற்ற அணிகள் மரம் அறுக்கும் இயந்திரங்களை சென்னை, கோவை, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து சாலையில் கிடக்கும் மரங்களை அறுத்தோம். அதேபோன்று பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தனிநபரின் வீடுகளுக்கு மேல் இருக்கும் மரங்கள், மின் கம்பங்களுக்கு மேல் விழுந்து கிடந்த மரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து வெட்டி வீழ்த்தினோம்.
மரங்களை அறுக்கும் பணி ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு பக்கம் மக்களுக்கு உடனடி தேவையான நிவாரண உதவிகளான மெழுகுவர்த்தி, கொசுவத்தி, தார்பாய் போன்ற உதவிகளும் செய்யத் துவங்கினோம். இரண்டாவது வாரத்தில் மக்களுக்கான தேவைகள் மாறியது. மக்களின் கையிருப்பு குறைந்து, அவர்கள் பணிக்கு செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. ஆகவே அவர்களுக்கான உடனடி தேவையான அரிசி, பருப்பு மற்றும் அன்றாட தேவையான பொருட்களையும் பல ஊர்களில் இருந்தும் தங்களுக்கு வந்த நன்கொடைகளின் மூலம் வாங்கி கொடுத்து வந்தோம்.
அதோடு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான விவசாய பெருமக்களுக்கும், விவசாய கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மனப்பயிற்சி என்று சொல்லப்படும் Counselling சில கிராமங்களில் கொடுத்தோம்.
அரசு உதவி பெறும் பள்ளிகள் சீரமைத்தல், மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் வழங்குதல் ஆகிய பணிகளும் நடந்து வருகிறது.
மின்சார பணியாளர்கள் மிகச் சிறப்பாக பணி செய்தாலும் போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தினாலும் அரசாங்கம் உள்ளூர் மக்களை பயன்படுத்த தவறிய காரணத்தினாலும் கிராமப் பகுதிகளில் இன்னும் மின்சாரம் வராத ஊர்கள் உண்டு. அதே போன்று எந்த ஒரு விவசாய நிலத்திலும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.
மக்களின் அன்றாட அவசிய தேவைகளை நிறைவேற்றி வரும்பொழுதே முழுவதும் வீடுகளை இழந்தவர்களின் கணக்கெடுப்பு பணியையும் மேற்கொண்டு, 100க்கும் அதிகமான பெரும்பாலும் கீற்று வீடுகளை இந்த 4 மாவட்டங்களிலும் கட்டி வருகிறோம்.
இந்த உதவிகள் புரிந்த வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம் கூட இது.
நம் அணியில் இருக்கும் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுக்கும் பணியும் நடந்து வருகிறது.
நிவாரண உதவிகள் ஒருபக்கம் நடந்தேறி வர இப்பொழுது சில பிரதான தேவைகளும் மக்களுக்கு உருவாகி இருக்கிறது. உடனடித் தேவைகளை தாண்டி நீண்டகால தேவைகளும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 4 விதமான சிக்கல் அங்கு ஏற்பட்டுள்ளது.
1. விவசாயம் கடுமையாக வீழ்ச்சியடைந்த காரணத்தினால் விவசாயிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களுடைய கடன் சுமை ஒரு பக்கம் அவர்களின் கழுத்தை இருக்குகிறது. வீழ்ந்து கிடக்கும் மரங்களை எப்படி வெட்டி அகற்றுவது, அடுத்து எப்படி பயிரிடுவது என்ற எண்ணம் அவர்களை தற்கொலை நோக்கித் தள்ளுகிறது.
2. சிறு விவசாயம் பார்த்து வந்தவர்களுக்கு இன்னும் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வராத காரணத்தினால், தண்ணீர் இல்லாமல் அந்த சிறு விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
3. விவசாய கூலிகளாக வேலை செய்த மக்களுக்கு அடுத்த மூன்று வருட காலத்திற்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது ஆகையால் அவர்களும் தங்களுடைய அன்றாட கூலியை இழந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
4. தொழிற்சாலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்களுக்கும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் அவர்களுடைய தொழிற்சாலைகள் மூடப்பட்டு இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க குறிப்பாக அவர்களின் விவசாயத்தை மீட்டெடுக்க நீண்டதொரு காலம் பிடிக்கும் என்பது நம் கள ஆய்வில் தெரிந்து கொண்ட விஷயம். கஜா புயல் அடித்த தினத்தில் இருந்து இதுவரை 14 பேர் தற்கொலை செய்துள்ளார்கள் என்பது அதற்கான சாட்சி. சுனாமி உயிர்களை பறித்தது என்றால், கஜா உயிரை தவிர மற்ற எல்லாவறையும் பறித்துவிட்டது என்ற வேதனை அவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
ஆகவே அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வரை அவர்களுக்கு நம் உதவிகள் தேவைப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் களப்பணியாற்ற இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணி செய்த தன்னார்வலர்கள் மற்றும் இயக்கங்கள் கொண்டு இந்த டெல்டா மாவட்ட மறுகட்டமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டெல்டா மாவட்ட கட்டமைப்பு குழுவானது இந்த பின்வரும் விஷயங்களில் தொடர்ந்து பணி செய்யப் போகிறது. இந்தக் குழுவானது மாநிலத்திலிருந்து செயல்படுவதுபோல், புயல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட டெல்டா மறுகட்டமைப்பு குழு உருவாக்கப்படும். மாநிலத்தில் இருக்கும் குழு ஒரு ஒருங்கிணைப்பு குழுவாக செயல்பட்டு எல்லா மாவட்டங்களுக்கும் தேவையான பணிகளை தொடர்ந்து செய்யும்.
டெல்டா மறுகட்டமைப்பில் குழுவின் கலந்தாய்வில் கீழ்க்கண்ட துறைகளை உருவாக்குவது என்றும் அந்தத் துறை சார்ந்த பணிகள் என்ன என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
அ. வாழ்வாதாரம்
1. விவசாயம்
நிபுணர்கள் குழுவின் அறிவுரைகள் பெறுதல், மாற்று விவசாயத்திற்காக அணுகுமுறைகள், கால்நடைகள், புதிய மரங்களை வழங்குதல், பழைய மரங்களை காப்பாற்றுதல்.
2. மாற்று தொழில்
விவசாய கூலித் தொழில் செய்து வந்தவர்களுக்காக அவர்களுடைய கிராமத்திலேயே பயிற்சிகள் கொடுத்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உண்டாக்குதல். அவர்கள் உருவாக்கும் பொருட்களை சந்தைப்படுத்துதல். ஏற்கனவே இது போன்று கிராமத்தில் சிறு தொழில் செய்து வருபவர்களின் யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன.
3. வேலைவாய்ப்பு
குறு மற்றும் சிறு தொழிலுக்கான பயிற்சி முறைகள், SMES/ MSMES Establishment, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சார் நிறுவனங்களை அமைக்க முயற்சித்தல் – இதற்காக அரசாங்கத்தோடு தொடர்ந்து பேசி வருகிறோம்.
சோலார் ரிலேட்டட் வேலைகள், சிறு கடன்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள்.
ஆ. கல்வி
10, 12 மாணவர்களுக்கான மற்றும் நீட் பயிற்சி, புத்தகம் மற்றும் வினாத்தாள்கள் தொகுப்பு, தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சிகள், மனதின்மைக்கான பயிற்சி முறைகள், உளவியல் ஆலோசனைகள்.
இ. சுகாதாரம்
சுகாதார மேம்பாடு, மனதின்மைக்கான பயிற்சி, மருத்துவ முகாம்கள்.
ஈ. நிவாரணம்
மரங்களை அகற்றுதல், நிவாரண பொருட்கள், வீடுகள் சீரமைப்பு , மீனவர்களுக்கான உதவிகள்.
உ. அரசுடன் இணைந்த செயல்பாடுகள்
அரசு சார்ந்த திட்டங்களை அறிதல், சாமானியர்களுக்கு சென்று சேரும் வழிமுறைகள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நல்லுறவை பேணுதல்.
ஊ. காலநிலை மாற்றத்தால் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்து வருகிறது, கடற்கரை மாவட்டங்களில் பேரிடர் செய்திகளை மக்களிடம் முன்னரே கொண்டுசேர்க்கும் கட்டமைப்புகளை அரசுடன் சேர்ந்து மேற்கொள்தல்.
சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்.
இந்த மேற்கொண்ட துறைகளுக்கு வலு சேர்க்கும் பொருட்டு, கீழ்க்கண்ட இரண்டு துறைகளும் செயல்படும்.
1.மக்கள் தொடர்பு
கள ஆய்வின் அடிப்படையில் தேவைகளை அறிதல், பகுதி சார் பொறுப்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், களத்திற்காக பணிபுரியும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், உதவும் மனம் உள்ள நல் உள்ளங்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
2. நிர்வாகம்
மேலாண்மை, அனைத்து துறைகளுடன் தொடர்பு, ஒருங்கிணைப்பு, பணிகளை செய்து முடித்தலுக்கான வழிகாட்டுதல், செய்து முடித்தமைக்கான பதிவுகளை உண்டாக்குதல்.
மேற்கண்ட துறைகளில் பொறுப்பாளர்களை தீவிர ஆலோசனைக்குப் பிறகு நியமிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாம் தொடர்ந்து செய்து வரும் பணிகளை காண, நீங்க்ள் இணைந்து பணியாற்ற, ஏற்கனவே களப் பணி செய்பவர்கள் மேலும் உதவி பெற டெல்டா மறுகட்டமைப்பிற்காக இந்த வலைதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது - http://gajahelp.valaitamil.com/villages/. நம்முடன் பணியாற்றும் மற்ற இயக்கங்களின் வலைதள பக்கங்களிலும் இவை பதிவேற்றப்படும்.
நாம் எடுத்திருக்கும் பணி என்பது சில கைகளால் முடிக்க முடியாதது. இந்த குழுவில் இன்னும் நிறைய இயக்கங்கள், தன்னார்வலர்கள் இணைய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கிறோம். அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நமது நோக்கம். டெல்டா மாவட்டங்களை மீட்டெடுக்க ஓராயிரம் கைகள் வேண்டும். களத்தில் பணி செய்யும் அனைவருக்கும் மேலும் உதவும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்த குழு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உங்கள் ஒவ்வொருவரின் உதவியியையும் எதிர்பார்க்க்கிறது.
பேரிடர் என்பது தற்பொழுது தொடர்கதையாகி வருகிறது. இயற்கையை நாம் பேணி காக்க வேண்டிய முக்கியத்துவத்தையும், அரசாங்கம் எடுக்க வேண்டிய தொடர் தொலைநோக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் இந்த பேரிடர்கள் நமக்கு தொடர்ந்து உணர்த்தி வருகிறது. இயற்கையை பேணி காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது நமது அவசியமாகிறது. இன்னொரு பேரிடர் நம் வாழ்க்கையை புரட்டிபோடாத வண்ணம் நாம் செயல்படுவது மிக அவசியமான ஒன்று.
நன்றி
நடிகர் ஆரி, ஜெகன், ஹரி, பூவுலகின் சுந்தரராஜன், தினேஷ், Inspire ரேவதி, தனபாலன், ராஜேஷ் குமார் மற்றும் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள்
"டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு"
தொடர்பு எண் : 9791050512

__________________________________________________________________________________________________

 

We are all aware that Cyclone Gaja devastated the life of people in Delta. Nagapattinam, Pudukkottai, Thanjavur & Thiruvarur were the most devastated. Dindigul also had destructions. A total of 71 lives were lost in Cyclone.
Volunteers & Social Organisations got into the field immediately - some of us took Ambulance to rescue people, some of us went with Tree Cutting Saws to clear the roads, Public Places, Schools, Hospitals and cleared the trees which fell on People's homes and on Electric Posts.
Relief work - bringing people the most needed Candles, Torches, Mosquito Coils, Tarpaulins were also started by us and many others. As priorities changed, we brought Rice, Dhal and other essential needs for the people.
We also gave Counselling to the affected people and distributed notes & books to School Children. Though Power is restored in most places, failure to involve local people has denied Power till date to a few villages. Power has not been restored to any agricultural farms.
We are also Re-Building 100s of houses destructed by Gaja in these 4 Districts.
Our team in North America is also working in Adopting Villages.
We thank the Donors from other Districts, States and other Countries. In addition to the immediate relief, there are also long term needs that needs to be taken care of. We see 4 Complications arising out.
1. Since farmers have lost their complete livelihood, they are not sure how their life will be. The farm loans are burdensome and their own fallen trees that they look everyday makes their life hard.
2. For farmers who were doing farming other than the ones affected by Gaja, there is still no power supply and hence they too do not have income.
3. For Daily Wage Labourers, since Agriculture is at a great loss, they do not have any Daily Jobs and they are clueless as well.
4. For people working in Industry, Since Power is not restored, they are also at a loss.
The farming sector is the most affected and it will take some years to bring back their livelihood. The fact that 14 farmers have committed suicide should show us how bad they have been affected. If more lives were taken by Tsunami, Gaja has taken everything except lives for most of the people.
This is where the need for a long term Delta Rehabilitation Committee with the Volunteers and Social Organisations who have worked in the field is required and we have formed it. We are further coordinating with individuals, various organizations, NGOs and other government agencies on ground to gather complete information to ascertain the extent of the help required and the capabilities required to fulfil the support needed. We will further create District level teams to Co-ordinate with the State Teams.
Also, our objective is to operate as a catalyst to consolidate the massive reconstruction and rehabilitation programs. We have execution teams both on ground and from the backend to support and act on the help required. We have discussed with key personalities, groups and organizations, contributing and are further willing to help for the wellbeing of the affected, in creating the execution teams. The individual teams are formed based on the responsibilities they will discharge.
A. Livelihood
1. Farmers Rehabilitation:
As most of the impacted villagers in the delta region are farmers a special team is required to execute all farming related improvisation work. This starts from clearing the fields, bringing in experts to advise on alternate farming solutions and other farming related improvisations that would help in the rehabilitation of the farming community.
2. Alternate employment:
To find the needs of the market, give training to Daily Wage Labourers on that specific product that is needed in the market and work on Selling it in the Market. We also need inputs from people working on Alternate Employment.
3. Employment
They will co-ordinate with the SMEs and other corporations in creating alternate employment opportunities in the affected region. They will also co-ordinate the vocational training for the youth and empower them to take up self -employment opportunities.
B. Education:
They will execute all activities related to students’ education. They will organize the sessions with motivational speakers, providing study materials, coaching centres for NEET exams and other support required to keep the students morale up and empower them to face the public exams.
C. Healthcare
Improving Healthcare, Arranging Health Camps, Counselling Sessions.
D. Relief work:
They co-ordinate and perform the on-ground relief work including but not limited to organizing medical camps for the injured, providing food for the hungry, creating temporary and permanent shelters, arranging counselling centres, etc.,
E. Government Relations:
Though the public relations team interact with the government agencies, a special focus group is created exclusively to understand the various schemes organized by the government, create visibility among the people and to ensure the benefits are reaching the deserved by working in tandem with the government agencies.
The following departments will work as Supporting Mechanisms for the above.
1. Public Relations:
They will interact with various entities, NGOs, government bodies and other individuals to understand the relief needs, cascade the information to other teams and co-ordinate with external entities on further updates, support and work performed.
2. Administration & Guidance:
They will provide the overall guidance, management and advice to each of the groups and help them to plan, manage and execute the work. They also follow up on the level of relief work done, co-ordinate and collect evidences for the work performed.
All our work will be uploaded in our website - http://gajahelp.valaitamil.com/villages/. Since this is a huge task, we require many more helping hands and that is possible only with your help. This is a committee for everyone to join and make our life easier. Let’s enable each other. Let's rehabilitate and rebuild Tamilnadu.
We will also soon announce a Toll-Free number for Gaja related works.
- For Gaja Rehabilitation Committee
Actor Aari, Jagan, Hari, Nallor Vattam Baluji, Dinesh, Dhanabal, 'Inspire' Revathy, Dhanabalan, Rajeshkumar & various Social Organisations.
Contact: 9791050512

______________________________________________________

இதுவரை ஊடகத்தில் வந்த செய்திகள் மற்றும் காணொளிகள்

https://tamil.thehindu.com/tamilna…/article25849658.ece/amp/
https://www.kamadenu.in/…/tamilnadu/13285-kaja-cyclone-reli…
http://bit.ly/PolimerabtPR
https://youtu.be/rAT8JmL8L00
https://youtu.be/RrFvy0EW6oE

Polimer News:  www.shorturl.at/auwCU
  01 Jan 2019 12:41 AM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)