Home  |  NGO

மரம் வளர்ப்பில் ஈடுபடும் நனை குழுவினர்

எங்கு செய்கிறோம்:
சென்னை சுற்று வட்டார பகுதியில் இடம் வைத்துக்கொண்டு மரம் நட ஆர்வமுடன் இருப்பவர்களின் பதிவு இருக்கிறது அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 1.5 இலட்சம் மரங்கள் மட்டும் இடம் தயாராக உள்ளது.
நனை குழுவினர் மற்றும் செயல்பாடு:
நம் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.
ஆகையால் எங்களுக்கு கிடைக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் மரம் நடும் பணியினை சென்னை சுற்றியுள்ள பகுதில் செய்து வருகிறோம்.
பிரயாண நேரம் குறைக்கவேண்டும் என்பதறகாக சென்னையில் மட்டும் செய்துவருகிறோம்.
தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 2 அடி குழி எடுப்பது.
நாட்டுமரகன்றுகள் நடுவது.
வட்ட வடிவில் பள்ளபாதி, வரப்பு அமைப்பது.
காய்ந்த சருகுகளை கொண்டு மூடாக்கு அமைப்பது.
மரத்தின் பயன்களை சொல்லிக்கொடுப்பது.
அருகிலுள்ள நாட்டு மரங்களில் இருந்து விதைகளை சேகரித்து கொடுப்பது. 
மூடாக்கின் நன்மைகளை எடுத்து சொல்வது, செயல் வடிவில் காட்டுவது.
மரகன்றுகள்:
இந்தவருட மரக்கன்று தேவைக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் இடங்களில் வாங்கி நட்டு வருகிறோம்.
அடுத்த வருடத்திற்கான நாற்றுகள் நன்மங்களம் பண்ணையில் வளர்த்து வருகிறது.
அதற்கான விதைகள் நண்பர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கொட்டி கிடந்த மரத்தின் விதைகளை சேகரித்து வருகிறோம்.
மர நாற்றுகளை தினந்தோறும் எங்கள் வீட்டு மொட்டை மாடிகளில், நாற்று பண்ணையில் வளரும் கன்றுகளை பராமரித்து வருகிறோம்.
நோக்கம்:
1. நம் நாட்டு மரங்கள் ஒவ்வொன்றிலும் நம் உடலுக்கு ஒரு ஆற்றலை கொடுத்து ஆரோக்கியமாக வாழ உதவும், இது தற்போது பற்றாக்குறையாக உள்ளது, தற்போது நடாவிட்டால் வருங்கால குழந்தைகளுக்கு எப்படி கிடைக்கும், இந்த நோக்கத்துக்காக செயல்படுகிறோம்.
2 ஒவ்வொரு ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியிலும் அவர்களை சுற்றி குறைத்து 50 வகையான நாட்டு மரங்கள் வளர்த்துவிடவேண்டும், அதன்மூலம் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படும்..
3. அதுமட்டுமின்றி எங்களது நோக்கம் மரம் நடுவதைகாட்டிலும் வளர்க்க வேண்டுமென்பதே.
4. நாட்டு மரங்களை நடுவதன்மூலம் எப்படி நம் அன்றாட பயன்பாட்டிற்கு மரங்களை சார்ந்திருக்க முடியுமென்று எங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துகொள்கிறோம். இதன் மூலம் வருங்கால குழந்தைகளுக்கு மரங்களின் தன்மை மகத்துவம் எளிதாகபோய்சேரும்.
5. சுத்தமான குடிநீரும் சுவாச காற்றும் அனைவருக்கும் கிடைக்க செய்வோம் இவை விற்பனைக்கான பொருட்கள் அல்ல.
6. உங்களிடம் ஒரு வேண்டுகோள் - நாம் முயற்சியால் வளரும் இந்த மரங்களை முடிந்தவரை வெட்டவேண்டாம், உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் இந்த மூலிகை மரங்களில் இருந்து கிடைக்கும் இல்லை, பூ, காய், கனி, விதை (பல மரங்களை உருவாக்க), பட்டை.... இப்படி எதுவெல்லாம் யாருக்கு தேவைப்படுகிறதோ அதை சேவை அடிப்படியில் பகிர்ந்துகொள்ளவும்.
7. மூடாக்கை பயன்படுத்தி குறைந்த நீரில், பராமரிப்பில் எப்படி ஒரு மரத்தை எளிதில் வளர்க்கும் முறையை செய்துகாண்பிப்பது.

எங்கு செய்கிறோம்:சென்னை சுற்று வட்டார பகுதியில் இடம் வைத்துக்கொண்டு மரம் நட ஆர்வமுடன் இருப்பவர்களின் பதிவு இருக்கிறது அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 1.5 இலட்சம் மரங்கள் மட்டும் இடம் தயாராக உள்ளது.

நனை குழுவினர் மற்றும் செயல்பாடு:நம் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.ஆகையால் எங்களுக்கு கிடைக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் மரம் நடும் பணியினை சென்னை சுற்றியுள்ள பகுதில் செய்து வருகிறோம்.பிரயாண நேரம் குறைக்கவேண்டும் என்பதறகாக சென்னையில் மட்டும் செய்துவருகிறோம்.தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 2 அடி குழி எடுப்பது.நாட்டுமரகன்றுகள் நடுவது.வட்ட வடிவில் பள்ளபாதி, வரப்பு அமைப்பது.காய்ந்த சருகுகளை கொண்டு மூடாக்கு அமைப்பது.மரத்தின் பயன்களை சொல்லிக்கொடுப்பது.அருகிலுள்ள நாட்டு மரங்களில் இருந்து விதைகளை சேகரித்து கொடுப்பது. மூடாக்கின் நன்மைகளை எடுத்து சொல்வது, செயல் வடிவில் காட்டுவது.

மரகன்றுகள்:இந்தவருட மரக்கன்று தேவைக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் இடங்களில் வாங்கி நட்டு வருகிறோம்.அடுத்த வருடத்திற்கான நாற்றுகள் நன்மங்களம் பண்ணையில் வளர்த்து வருகிறது.அதற்கான விதைகள் நண்பர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கொட்டி கிடந்த மரத்தின் விதைகளை சேகரித்து வருகிறோம்.மர நாற்றுகளை தினந்தோறும் எங்கள் வீட்டு மொட்டை மாடிகளில், நாற்று பண்ணையில் வளரும் கன்றுகளை பராமரித்து வருகிறோம்.

நோக்கம்:

1. நம் நாட்டு மரங்கள் ஒவ்வொன்றிலும் நம் உடலுக்கு ஒரு ஆற்றலை கொடுத்து ஆரோக்கியமாக வாழ உதவும், இது தற்போது பற்றாக்குறையாக உள்ளது, தற்போது நடாவிட்டால் வருங்கால குழந்தைகளுக்கு எப்படி கிடைக்கும், இந்த நோக்கத்துக்காக செயல்படுகிறோம்.

2 ஒவ்வொரு ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியிலும் அவர்களை சுற்றி குறைத்து 50 வகையான நாட்டு மரங்கள் வளர்த்துவிடவேண்டும், அதன்மூலம் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படும்..

3. அதுமட்டுமின்றி எங்களது நோக்கம் மரம் நடுவதைகாட்டிலும் வளர்க்க வேண்டுமென்பதே.

4. நாட்டு மரங்களை நடுவதன்மூலம் எப்படி நம் அன்றாட பயன்பாட்டிற்கு மரங்களை சார்ந்திருக்க முடியுமென்று எங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துகொள்கிறோம். இதன் மூலம் வருங்கால குழந்தைகளுக்கு மரங்களின் தன்மை மகத்துவம் எளிதாகபோய்சேரும்.

5. சுத்தமான குடிநீரும் சுவாச காற்றும் அனைவருக்கும் கிடைக்க செய்வோம் இவை விற்பனைக்கான பொருட்கள் அல்ல.

6. உங்களிடம் ஒரு வேண்டுகோள் - நாம் முயற்சியால் வளரும் இந்த மரங்களை முடிந்தவரை வெட்டவேண்டாம், உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் இந்த மூலிகை மரங்களில் இருந்து கிடைக்கும் இல்லை, பூ, காய், கனி, விதை (பல மரங்களை உருவாக்க), பட்டை.... இப்படி எதுவெல்லாம் யாருக்கு தேவைப்படுகிறதோ அதை சேவை அடிப்படியில் பகிர்ந்துகொள்ளவும்.

7. மூடாக்கை பயன்படுத்தி குறைந்த நீரில், பராமரிப்பில் எப்படி ஒரு மரத்தை எளிதில் வளர்க்கும் முறையை செய்துகாண்பிப்பது.

தொடர்புக்கு: 

ஈஸ்வரன் 

+919841085484

மதன் +919095391602

  04 Jan 2019 06:17 PM