Home  |  News

வேர்கள் கல்வி அறக்கட்டளை நண்பர்கள், கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கும், மாவட்டங்களுக்கும், தேவைகளாக கருதுவது:

Contact Person நளினி
Phone No number

1. கல்வி உதவி : உடனடியாக மாணவர்களுக்கு குறிப்பாக 10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு பெரிய கோடு போடாத நோட்டு புத்தகங்கள் அதிக அளவில் வழங்கப்பட வேண்டும் அது அவர்களுக்கு தேர்வு எதிர்நோக்க உதவிசெய்யும் . மின்சாரம் அற்ற சூழலில் மாணவர்கள் அமர்ந்து படிக்க, அவர்களோடு உரையாட, உணவு தேவைப்படின்,அதையும் வழங்க மையங்கள் பள்ளியிலேயே ஏற்படுத்தலாம். வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவையும் நாம் ஏற்கலாம் .கல்வி கட்டணத்தை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தலாம் .இன்னும் சில மாதங்களில் பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல மாணவர்களுக்கு ஆலோசனைகள், கல்வி உதவிகள் வழங்கலாம். கல்லூரி பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு , அரசு வேலைகள் அல்லது மற்ற வேலைகளுக்கு அவர்களை தயார் செய்யும் பயிற்சி வகுப்புகள், எடுக்கலாம். இதை தன்னார்வலர்கள் முன்னெடுக்கலாம். அல்லது அதை செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை வைக்கலாம். 2. குடிநீர் உதவி : மின்சாரம் அற்ற சூழலில் குடிநீருக்கு கடும் தேவை இருக்கிறது. அடிபம்புகள் பயன்படுத்த முடியாத சூழலில் இருக்கின்றன .சில கடலோர மாவட்டங்களில் அடிபம்புகள் சரிசெய்தால் அல்லது புதிய பம்புகளை போட்டுக் கொடுக்க முடிந்தால் குடிநீர் தேவை பூர்த்தியாகி விடும். இதற்கான முயற்சியை முன்னெடுக்கலாம் .அதற்கு முன் அந்த இடங்களை கள ஆய்வு செய்வது மிகுந்த அவசியம். 3. உளவியல் உதவி: குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் எல்லோருமே ஒரு வகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் .சிலருக்கு அந்த புயலை நினைத்த மாத்திரத்தில் அதன் உஷ் ஓசையை நினைத்து பயமும் பதட்டமும் இன்னமும் இருக்கிறது. தூக்கமின்மை, அடுத்து என்ன நேருமோ என்ற கவலை, இவை பெரும்பாலானவர்களிடம் காணப்படுகின்றது. ஏற்கனவே செய்த வேலைகளை விடுத்து அடுத்து செய்யக்கூடிய மாற்று வேலைகள் என்ன ?அதற்கு தன்னால் ஒத்துப்போக முடியுமா ?என்ற குழப்பமும், கவலையும் நிலவுகிறது. அரசு என்ன உதவிகள் செய்யும்? யார் நமக்கு உதவி செய்வார்கள்? எப்படி இந்த சூழலை எதிர்கொள்ள போகிறோம்? என்று பல்வேறுபட்ட கவலைகள் இருக்கின்றது நஷ்டமடைந்த விவசாயிகள் கடனை எப்படி திருப்பிக் கொடுக்க முடியும்? என்று கவலையில் விவசாயிகள் வீடுகளை உடமைகளை இழந்து குடும்பங்கள் எதற்கு நாம் உயிரோடு இருக்க வேண்டும்? என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கிறது. இதற்காக குழு உளவியல் ஆலோசனை தனிப்பட்ட ஆலோசனை வழங்க முன்னெடுப்பது அரசுக்கு அவசியமாய் இருக்கிறது .கலைஞர்கள் உளவியலாளர்கள் இணைந்து அவர்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையோடு வாழ்வை எதிர்நோக்க நம்மாலான ஆலோசனைகளை , நாடகங்களை, பாடல்களை, செய்யலாம். 4. தகவல் பரிமாற்றம்: மின்சாரமற்ற சூழலில் மற்றும் செல்பேசி தொடர்புகள் குறைவாக உள்ள சூழலில் தகவல் பரிமாற்றம் என்பது இப்பொழுது மிகுந்த அவசியமானதாக இருக்கிறது கம்யூனிட்டி ரேடியோ ,சமுதாய வானொலி போன்ற விஷயங்களை நாம் முன்னெடுக்கலாம். என்னென்ன தேவைகள் என்று மக்கள் பகிர்ந்து கொள்ளவும், அந்தத் தேவைகள் எங்கெல்லாம் கிடைக்கும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்தும், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும், வானிலை குறித்தும், அவர்களுக்கு தகவல்கள் போய் சேர வேண்டியது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக என்னென்ன உதவி எப்படி கிடைக்கும் ?யாரை அணுகலாம் ?என்று விஷயங்களை சமுதாய வானொலியில் நம்மால் செய்ய முடியும். இதை பரீட்சித்து பார்க்கலாம். 5. தொழில் உதவி: டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இது அனைவரும் அறிந்ததே என்றாலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான பாதிப்புகள் உள்ளன. சில மாவட்டங்களில் தென்னந்தோப்பு ,மாங்கொல்லை, பூச்செடிகள் ,வாழைத்தோப்பு என்ற பல்வேறு வகையான பாதிப்புகளும், விவசாய நிலங்களும், மீனவர்களுக்கு படகு, வலைகள், பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதை செய்கின்ற விவசாயிகள் மீனவர்கள் அவர்களை சார்ந்து வேலை செய்கின்ற விவசாயக்கூலிகள் மீனவர் குடும்பங்கள் இவர்கள் அனைவருக்கும் இப்பொழுது வருமானம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது அவர்கள் மீண்டும் தொழில் தொடங்க, குறைந்தபட்சம் ஆறு ஏழு மாதங்கள் ஆகும். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும். தோப்பு வைத்திருப்பவர்கள் ,திரும்பவும் தென்னை மரங்களையும், முந்திரி மரங்களையும், மாமரங்களையும், வளர்த்தெடுப்பதற்கு பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் ஆகும். வாழை, பூச்செடி வைத்திருப்பவர்களுக்கு அதற்கான காலம் ஆகும். அதுவரை அவர்களுக்கு மாற்று வருமானத்திற்கு ஏற்பாடு செய்து சிறு சிறு தொழில் முனைவோர்களை, உற்பத்தி செய்யும் சிறு சிறு தொழிற்சாலைகள், பெண்கள் செய்யக்கூடிய வேலைகளுக்கான பயிற்சி மையங்கள், கணினி பயிற்சி உட்பட, உருவாக்க முடிந்தால் உபயோகமானதாக இருக்கும். தென்னங்கன்றுகள் வழங்குவது மீன்பிடி படகுகள் வலைகள் வழங்குவது திரும்பவும் மாங்கன்றுகள் வைப்பது வாழை, பூச்செடிகள் வைத்து தருவது என்று வேலைகள் மேற்கொள்வது மிகுந்த அவசியமாகும். அதற்கான பணம், இடம், கடன் உதவிகளை செய்ய அரசை வலியுறுத்தலாம். 6. வீடு கட்ட, பசியாற உதவி: நிறைய வீடுகள் புயல் காற்றினால் சூறையாடப்பட்டுள்ளது கூரை வீடுகள் கூரை வீடுகள் இருந்த இடம் தெரியாமல் சின்னாபின்னமாகி உள்ளது ஓட்டு வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை அனைத்தும் சரி செய்ய அரசு மக்களுக்கு உதவ வேண்டும் . தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தேவையானய வர்களுக்கு வீடு கட்டி தரலாம். புஷ்பவனம் போன்ற ஊராட்சிகளில் மீனவர் கிராமங்களில் 3 அடிக்குசேறு புகுந்துள்ளது .சேறு அள்ளவே மிகுந்த இயந்திர செலவும் மக்கள் உழைப்பும் தேவைப்படுகிறது. அதற்கு உதவலாம். வருமானம் அற்ற இந்த சூழலில் உணவுக்கும் இயல்பான வாழ்வு செலவிற்கும் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கலாம். அதை செய்ய அரசை வலியுறுத்தலாம். சமுதாயக் கூடங்களில், சமுதாய சமையல் , உணவு சமைத்து பரிமாறலாம் . 7. காடமைக்க உதவி: வேதாரண்யம் அருகே கோடிக்கரையில் உள்ள கோடி காடு மரங்கள் எல்லாம் முறிந்து அழிந்து காணப்படுகிறது. அந்த காட்டை சார்ந்துள்ள மிருகங்கள், அங்கு அமைந்துள்ள சரணாலயத்தை சேர்ந்த பறவைகள், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன சமீபமாக கருவேல மரங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன .அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது. இந்த காட்டை மீட்டெடுக்கும் பணியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் .கருவேல மரங்களை உடனே அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் அந்த காட்டை சார்ந்துள்ள மான்கள், குரங்குகள் ,பிற உயிரினங்கள் பறவைகள் , தங்குமிடமாகவும், உணவிடமாகவும் அந்த காடு மீண்டும் செழித்து வளர நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மிருக ஆர்வலர்கள் ,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதை உடனே முன்னெடுக்க வேண்டும். அவசரம்.அவசியம். 8. அரசியல் உதவி: அனைத்து கட்சிகளும், போராட்டம், மற்றும் இதர வடிவங்களில் இதை முன்னெடுக்கவேண்டும். மின்சாரத்திற்கும், குடிநீருக்கும், வேலையற்று போன மக்களுக்கு உணவு வழங்கவும், சமுதாய சமையலறைகள் ஏற்படுத்தவும், மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக வெளிச்சம் தரக்கூடிய உணவு தரக்கூடிய மையங்கள் ஏற்படுத்தவும், அரசை நாம் வலியுறுத்த வேண்டும் அல்லது அதற்கான முன்முயற்சியில் நாமே கூட ஈடுபடலாம் தேவைகள் அதிகமாக இருக்கும்போது அதை தன்னார்வலர்கள் மட்டுமே செய்துவிட முடியாது அரசு முன் முயற்சி எடுக்கும்போது தன்னார்வலர்கள் துணை செய்யலாம். பள்ளி மாணவர்களுக்கு இந்த பொதுத்தேர்வை எதிர்நோக்கவும், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் மேற்கல்வி படிக்க வைக்கவும், உதவலாம் .குழந்தைகளிடம், அவர்களுடைய பயம் குறித்து உரையாடலாம். குழந்தைகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் ஆசிரியர்களை அதற்காக பயிற்றுவிக்கலாம் .குழந்தைகளை சந்தித்தபோது அவர்கள் பயமும் பதட்டமும் வெளிப்படுத்தினர். சில இடங்களில் தூக்கமின்மையும் இந்த மின்சாரமற்ற சூழல் வீடற்ற சூழலுக்கு தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ள மறுக்கும் மனநிலையும் அவர்களை தொந்தரவு கொடுக்கின்றனர் பெரியவர்கள் கூட இத்தகைய சூழலில் நம்பிக்கையற்று ஏதும் அற்ற சூழலில் உயிர் வாழ்வது குறித்து சந்தேகத்தோடு பேசுகின்றனர். மீனவ குடும்பங்கள் பொருள்கள் இல்லாமல் வெறும் உயிர் வாழ்வதற்கு சாவது மேல் என்னும் தொனியில் பேசுகின்றனர். இவை அனைத்தையுமே நாம் உரையாட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக அரசு தன் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .நம்பிக்கை தரும் அரசை அவர்கள் எதிர்பார்க்கின்றனர் மின்சாரமற்ற சூழலில் அங்கங்கே ஏடிஎம் கூட வேலை செய்யவில்லை பணப்புழக்கம் மிகவும் குறைந்துள்ளது இது கடுமையாக மக்களை பாதிக்கிறது .மக்களுக்கு மாற்று வேலைகள் உற்பத்தி திறன் கொடுக்கக்கூடிய சிறு சிறு தொழிற்சாலைகள் அல்லது குழுவாக சேர்ந்து செய்யக் கூடிய வருமானம் தரக்கூடிய சிறு தொழில்கள் இதற்கான பயிற்சி அளிப்பது தேவையான விஷயமாய் இருக்கிறது அது அவர்களுக்கு இடைப்பட்ட வருமானத்திற்கு வழி வலிக்கும் நிறைய பெண்கள் சுய உதவி குழு கடன்கள் வாங்கி உள்ளன அதற்கு அரசு மாற்று வழி வகை செய்ய வேண்டும் கடன் கொடுத்தவர்கள் அவர்களை தொந்தரவு கொடுக்காமல் இருக்க மக்களுக்கு வருமானம் வரக்கூடிய தொழிற்பயிற்சியும் மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்க வேண்டும் இதை செய்ய இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் வகுக்க வேண்டும். இதற்கான போராட்டங்கள் மக்களை இணைத்து செய்ய வேண்டும். 9. கலை உதவி: இந்த சூழலில் கலைஞர்களின் எழுத்தாளர்களின் கதைசொல்லிகளின் நாடக கலைஞர்களின் பங்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது மக்களது சோகங்களை பாட்டாகவும் நாடகமாகவும் இல்லை நடனமாகவும் அவர்கள் வெளிப்படுத்த உதவும் பொழுது அதற்கான மாற்று ஏற்பாடு அல்லது அடுத்தது என்ன என்ற முயற்சியில் நம்பிக்கை வைக்க இது மிகவும் உதவும் .மாணவர்களிடமும் பெரியவர்களிடமும் இந்த கலைக்குழு வேலை செய்வது அவசியமாயிருக்கிறது . 10. ஊடக உதவி: டெல்டா பாதிப்புகளை, தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும், இதர மாநிலங்களுக்கும், உலகிற்கும், பறை சாற்றி, அறிவிக்க ஊடகங்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட வேண்டும். .....10.12.2018, நளினி, வேர்கள் சார்பாக.
  12 Dec 2018 10:50 PM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)